இரணியல்-தக்கலையில் பெண் என்ஜினீயர்- கல்லூரி மாணவி மாயம்

இரணியல்-தக்கலையில் பெண் என்ஜினீயர், கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயம்
மாயம்
Published on

தக்கலை:

இரணியல் அருகே நெய்யூர் அடுத்த பட்டன்விளையை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஸ்ரீஜா (29). பொறியியல் பட்டதாரியான இவர் தக்கலை அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு கோச்சிங் செண்டரில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பயிற்சி வகுப்புக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து அவரது சகோதரி கவிதா (வயது 34) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

தக்கலை அருகே ராமன் பறம்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் அகல்யா (வயது 19). இவர் சுங்கான்கடையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் காணாததால் பதட்டமடைந்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com