பெரியமேட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி

பெரியமேட்டில் தனியார் தங்கும் விடுதியின் மொட்டைமாடியில் பணிபுரிந்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் தவறி விழுந்து உயிரிழந்தார்.
மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி
மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி
Published on

சென்னை:

சென்னை அயனாவரம் மேட்டுதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 24). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் பெரியமேடு ராஜ முத்தையா சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் மொட்டைமாடியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகுமார் எதிர்பாராத விதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த பெரியமேடு போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com