தோட்டத்தில் அமைத்திருந்த மின்வேலியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலி

மலையையொட்டியுள்ள ராஜாங்கம் என்பவரின் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு காட்டு பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியை எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மிதித்ததாக தெரிகிறது. மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த வளர்ப்பு நாயும் மின்வேலியில் சிக்கி இறந்தது.
மின்சாரம் தாக்கி இறந்த விவசாயியையும், நாயையும் படத்தில் காணலாம்.
மின்சாரம் தாக்கி இறந்த விவசாயியையும், நாயையும் படத்தில் காணலாம்.
Published on

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி ஊராட்சி, முத்துப்பாண்டி பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62), விவசாயி. இவர் தினமும் காலையில் வளர்ப்பு நாயுடன் தோட்டத்துக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி இன்று காலை கணேசன் வளர்ப்பு நாயுடன் தோட்டத்துக்கு சென்றார்.

மலையையொட்டியுள்ள ராஜாங்கம் என்பவரின் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு காட்டு பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியை எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த வளர்ப்பு நாயும் மின்வேலியில் சிக்கி இறந்தது.

இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தோட்ட உரிமையாளர் ராஜாங்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வேலியில் சிக்கி விவசாயியும், உடன் சென்ற அவரது வளர்ப்பு நாயும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com