மதுரவாயலில் குளிர்காய நெருப்பு மூட்டிய மூதாட்டி தீயில் கருகி பலி

தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் இளங்கோவன் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.உடல் கருகி படுகாயமடைந்த வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மதுரவாயலில் குளிர்காய நெருப்பு மூட்டிய மூதாட்டி தீயில் கருகி பலி
Published on

போரூர்:

சென்னை மதுரவாயல் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி வசந்தா (வயது67).

இவர் நேற்று இரவு குளிர் காய்வதற்காக வீட்டின் அருகே குச்சிகளை சேர்த்து வைத்து நெருப்பு பற்ற வைத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக வசந்தாவின் சேலையில் தீப்பிடித்தது. உடல் முழுவதும் தீ வேகமாக பரவியதால் வசந்தா அலறி துடித்தார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் இளங்கோவன் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதில் உடல் கருகி படுகாயமடைந்த வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com