குற்றாலம் அருகே வாயில் துணியை கட்டி முதியவர் அடித்துக்கொலை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே வாயில் துணியை கட்டி முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

குற்றாலம்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள கீழ இலஞ்சியை சேர்ந்தவர் கோட்டைமாடன்(வயது 65). இவர் மாந்தோப்பு வைத்து பராமரித்து வந்தார்.

இன்று அதிகாலை வழக்கம்போல் தோப்புக்கு சென்ற கோட்டைமாடன் அங்கு இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக தோட்டத்திற்கு சென்றவர்கள் பார்த்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் அந்த தோப்புக்கு விரைந்து சென்றனர். அங்கு கோட்டைமாடன் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்களும் இருந்தன. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

மேலும் அவர் சத்தம்போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து கட்டியிருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முதியவரை அடித்துக்கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com