கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் உயிரிழப்பு

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

கடலூர்:

கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் சம்பவத்தன்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக மஞ்சக்குப்பம் கிராம அதிகாரி ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து இறந்துபோன நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்துபோன முதியவரின் உடல் கடலூர் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com