மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் மீது புகார்- கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணையின் முடிவில் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி கூறினார்.
விசாரணை
விசாரணை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் ஒரு தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன.

அதாவது அந்த தலைமை ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

சமூக நலத்துறை அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். விசாரணையின் முடிவில் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் ஏற்கனவே நாகர்கோவிலில் உள்ள மற்றொரு அரசு பள்ளியில் பணியாற்றியபோதும் இதுபோன்ற புகாருக்கு ஆளானதாகவும், இதன் காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com