பொன்னேரி அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

பொன்னேரி அருகே நாய் கடித்து புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மான் உயிரிழப்பு
மான் உயிரிழப்பு
Published on

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதியில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள் பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள் வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.

நேற்று தண்ணீருக்காக தேடிவந்த புள்ளிமானை பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் வயல் பகுதியில் நாய்கள் கடித்து துரத்தியதில் முள் வேலியில் சிக்கி இறந்தது. பொதுமக்கள் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்ததின் பேரில் மாதர்பாக்கம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com