பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டி.எம்.எஸ். வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்
Published on

சென்னை:

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3,200 தற்காலிக செவிலியர்களில் 800 பேர் பணிநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் டி.எம்.எஸ். வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பணி நீக்கத்தை ரத்துசெய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்ச்ருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com