தேனியில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நூதன போராட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சீர்மரபினர் நலச்சங்கம், சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. தரையில் வாழை இலையை விரித்து அதில் சோறு மற்றும் பூசணிக்காயை வைத்து சோற்றின் மூலம் பூசணிக்காயை மறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து போராட்டம் நடத்தியவர்களை படத்தில் காணலாம்.
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து போராட்டம் நடத்தியவர்களை படத்தில் காணலாம்.
Published on

தேனி:

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சீர்மரபினர் நலச்சங்கம், சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. அவர்கள் தரையில் வாழை இலையை விரித்து அதில் சோறு மற்றும் பூசணிக்காயை வைத்து சோற்றின் மூலம் பூசணிக்காயை மறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கண்டித்தும், அதனை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com