கணவன் இறந்த துக்கத்ததில் மனைவி தற்கொலை

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் இறந்த துக்கத்ததில் மனைவி தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சூரியன்பேட்டை சேர்ந்தவர் கந்தன். (வயது 48). இவருக்கு ரமாவள்ளி (வயது 40 ) என்ற மனைவி இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை கந்தனுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இதனால் கந்தனின் மனைவி ரமாவள்ளி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடனடியாக ரமா வள்ளியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் இன்று அதிகாலை ரமாவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com