கோவிலின் லாக்கரை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலின் லாக்கரை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
Published on

கடலூர்:

கடலூர் வண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோவில் ஊழியர், கோவிலை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலுக்குள் இருந்த அறை திறந்து கிடந்தது. அறைக்குள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.

இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோவிலுக்குள் வந்த மர்ம நபர் அங்கிருந்த சமையலறை வழியாக லாக்கர் இருந்த ரூமிற்கு சென்றுள்ளார். பின்னர் லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com