சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி

கந்து வட்டி கட்டச் சொல்லி கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயன்ற தம்பதியினரை படத்தில் காணலாம்.
தீக்குளிக்க முயன்ற தம்பதியினரை படத்தில் காணலாம்.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி திரிஷா.

இந்த தம்பதி இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அலுவலக பிரதான கேட் முன்பு உள்ள சாலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்ற முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மண்எண்ணெய் கேனை பிடிங்கி அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

நான் சிறுவாச்சூர் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து வியாபரம் செய்ய கந்து வட்டிக்கு 20,000 ரூபாய் வாங்கினேன். சிறுக சிறுக ரூ.16,000 கட்டிய நிலையிலும் 4 ஆயிரம் ரூபாய் கட்ட சற்று காலதாமதம் ஆனது. இதையடுத்து அவர், அவரது கூட்டாளிகளுடன் எனது வீட்டிற்கு வந்து என்னை தகாத வார்த்தையில் பேசியும் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் எனது மனைவியை எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த நிலையில் எனது மனைவி வலி தாங்க முடியாமல் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி சிகிச்சைக்கு அனுமதித்தோம். இதுகுறித்து தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் கந்துவட்டி நபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனையில் இன்று கலெக்டர் அலுவலகம் அருகே வந்து தற்கொலை செய்ய முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

தீக்குளிக்க முயன்ற நாகராஜன்- திரிஷா தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com