சங்கரன்கோவிலில் சாவிலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் மரணம்

மனைவி இறந்ததால் நேற்று முதல் சங்கர மகாலிங்கம் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.இறப்பிலும் இணை பிரியாத தம்பதியின் மரணம் காரணமாக கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
சங்கரன்கோவிலில் சாவிலும் இணைபிரியாத தம்பதி:  மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் மரணம்
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர்நகர் 3-ம் தெருவை சேர்ந்தவர் சங்கரமகாவிங்கம். இவரது மனைவி சிவஞானம்மாள். கணவன், மனைவி இருவரும் மிகவும் பாசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை சிவஞானம்மாள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று காலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மனைவி இறந்ததால் நேற்று முதல் சங்கர மகாலிங்கம் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

இதற்கிடையே மனைவி இறந்ததை தாங்கி கொள்ள முடியாத அவர் இன்று காலை உயிரிழந்தார். இறப்பிலும் இணை பிரியாத தம்பதியின் மரணம் காரணமாக அக்கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com