சோனியாகாந்தியுடன் டிஆர் பாலு எம்பி சந்திப்பு
சோனியாகாந்தியுடன் டிஆர் பாலு எம்பி சந்திப்பு

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சி பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம்

அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து, மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
Published on

சென்னை:

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. பொருளாளரும், பாராளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார். உடனடியாக, சோனியா காந்தி, ‘அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமித்து, மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தியும் உடனிருந்தார்.

அதோடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க தானும், தான் சார்ந்த இயக்கமும் ஜனநாயக - மதச்சார்பற்ற முற்போக்குச் சக்திகளுடன் இணைவதாகவும், இதுகுறித்து. நேரில் கலந்தாலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘சமூகநீதிக் கருத்தியலை தேசிய அளவில் முன்னெடுப்பதற்காக வாழ்த்து தெரிவித்து, இந்த அமைப்பினை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாம் கலந்தாலோசிக்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த முன்னெடுப்பினைப் பாராட்டி, இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஒத்துழைப்பினை அளிக்கும்’எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com