முறைகேடு புகார்- பல்லடம் சார்பதிவாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சார்பதிவாளர்களாக திருப்பூரில் பணியாற்றி வந்த பெருமாள்ராஜா, பூபதி ராஜா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டனர்.
முறைகேடு புகார்- பல்லடம் சார்பதிவாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பல்லடம் பத்திர எழுத்தர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பத்திர பதிவுக்கு வந்தவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர்களாக பணியாற்றிய பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகிய 2பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் பல்லடம் சார்பதிவாளர்களாக திருப்பூரில் பணியாற்றி வந்த பெருமாள்ராஜா, பூபதி ராஜா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டனர். பல்லடம் சார்பதிவாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து பல்லடம் பத்திர எழுத்தர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதுடன், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com