கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை: தந்தையிடம் மன்னிப்பு கேட்க செல்வதாக உருக்கமான கடிதம்

மனமுடைந்து காணப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலை குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை: தந்தையிடம் மன்னிப்பு கேட்க செல்வதாக உருக்கமான கடிதம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் சாமுண்டி புரத்தை சேர்ந்தவர் ஜெயராமன், பனியன் தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மணிகண்டனின் தந்தை ஜெயராமன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென பலியானார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது மணிகண்டன், வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அப்பா உயிரோடு இருக்கும் போது அவரது அருமை எனக்கு தெரியவில்லை. அவரின் சொல் பேச்சு கேட்காமல் எனது இஷ்டம் போல் இருந்தேன்.

எனவே நான் எனது தந்தையிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்க செல்கிறேன். எனது நண்பர்கள் உள்ளிட்ட யாரிடமும் விசாரிக்க வேண்டாம். தந்தை சென்ற இடத்திற்கு நானும் செல்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com