3-ம் ஆண்டு பாடம் கடினமாக இருந்ததால் பி.பார்ம் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 3-ம் ஆண்டு பாடம் கடினமாக இருந்ததால் பி.பார்ம் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

காரமடை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிவன்புரம் காலனியை சேர்ந்தவர் அறம்வளர்த்தான். இவரது மகள் அர்ச்சனா (வயது 21). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

3-ம் ஆண்டு பாடங்கள் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இதனால் அர்ச்சனா படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்தார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அர்ச்சனா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட அர்ச்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com