வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவி தற்கொலை

விடுதியின் அறையை சுத்தம் செய்வதற்கு தூய்மை பணியாளர் சென்றார்.மாணவி திவ்யஸ்ரீ கடந்த ஓராண்டுக்கு மேலாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்துள்ளார்.
வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவி தற்கொலை
Published on

சென்னை:

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் திவ்யஸ்ரீ. 20 வயதான இவர் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற இவர் மாலை விடுதிக்கு திரும்பினார்.

விடுதியின் அறையை சுத்தம் செய்வதற்கு தூய்மை பணியாளர் சென்றார். அறையின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததால் பின்பக்கமாக சென்று ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, அறைக்குள் திவ்யஸ்ரீ மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர், விடுதியின் துணை வார்டனுக்கு தகவல் தெரிவித்தார். விடுதி காவலாளிகள் அறையின் கதவை உடைத்து மாணவியின் உடலை மீட்டனர்.

வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

மாணவி திவ்யஸ்ரீ கடந்த ஓராண்டுக்கு மேலாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்துள்ளார். அதற்காக மருந்து சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com