புவனகிரி அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்- 4 பேர் மீது போலீசார் வழக்கு

சம்பவத்தன்று கல்லூரி மாணவியை திடீரென்று காணவில்லை. சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்- 4 பேர் மீது போலீசார் வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி திருச்சி தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி மாணவியை திடீரென்று காணவில்லை.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மாணவியிடம் விசாரித்த போது 4 பேர் கொண்ட கும்பல் என்னை கடத்திச் சென்று சேலத்தில் அடையாளம் தெரியாத ஒரு வீட்டில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும், தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com