பொதுமக்கள் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்- கலெக்டர் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கிட சிறப்பாக பணிபுரிந்த சிறப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் மனுக்கள் பெற்றார்
பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் மனுக்கள் பெற்றார்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 420 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வுகாண வேண்டும்.

பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதி முறை களுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவினை முன்னிட்டு சிறப்பு பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டு, குறள் ஒப்பித்தல், நாடகம், நடனம், பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் இடத்தில் வெற்றி பெற்ற 5 மாணவ-மாணவி்களுக்கு கலெக்டர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கிட சிறப்பாக பணிபுரிந்த சிறப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்சித் சிங் கற்பகம், உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com