செஞ்சி ராஜா குளத்தில் படகு குழாம் அமைக்கப்படும்- கலெக்டர் தகவல்

விழுப்புரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் ஒலக்கூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உல்லாச போக்கிடமாக மாற்றம் செய்து வருகின்றனர்.
பாதாள சாக்கடை திட்டப்பணி மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்
பாதாள சாக்கடை திட்டப்பணி மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் நகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் எல்லிஸ் சத்திரம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் நகராட்சி மூலம் மாபெரும் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை, வழுதரெட்டி இ.எஸ் பாலிடெக்னிக் அருகில் மாபெரும் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்து, சாலை ஓரமாக உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விழுப்புரம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும் நீர்வழிப் போக்குவரத்துகளான கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட விழுப்புரம் வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார் தொடர்ந்து சாலை ஓரமாக குப்பை கொட்டுதல் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு மேற்கொள்பவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தி நீர்நிலை அருகே காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மியாவாக்கி முறையில் அடர்காடுகளை வளர்த்திட பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விழுப்புரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் ஒலக்கூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உல்லாச போக்கிடமாக மாற்றம் செய்து வருகின்றனர். அதில் 20 ஏக்கர் அளவில் விலங்குகளுக்கு பசுமை தீவனகாடு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஏக்கர் அளவில் குளம் வெட்டி மீன் வளர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அந்த இடங்களை சுற்றி மரங்கள் நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் எதிர்காலத்தில் ஒலக்கூர் பகுதியின் பெரிய சுற்றுலா தளமாக மாற வாய்ப்புள்ளது எனவும், மேலும் செஞ்சி ராஜாங்குளத்தை தூர்வாரப்பட்டு பொதுமக்கள் படகுசவாரி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com