ராசிபுரத்தில் சேவல் சண்டை நடத்திய 10 பேர் கைது

ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
ராசிபுரத்தில் சேவல் சண்டை நடத்திய 10 பேர் கைது
Published on

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் குமாரசாமி தெரு பகுதியில், சேவல் சண்டை நடைபெற்று வருவதாக ராசிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்து 5 சேவல்கள், ரொக்கம் ரூ. 500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக தட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 25), குமாரசாமி தெருவைச் சேர்ந்த பெரியசாமி (32), அணைப்பாளையம் மூர்த்தி (30), கண்ணூர்பட்டி சதீஷ்குமார்(33), தட்டான்குட்டை கேசவன்(22), சந்திரசேகரன்(26), முள்ளுவாடிகேட் சுரேஷ் (32), முனியப்பன்(36), மணிமாறன்(35), லட்சுமணன்(40) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு அவர்களை ஜாமினில் விடுதலை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com