பெண்ணுடன் ஆபாசமாக வீடியோகாலில் பேச ஆசைப்பட்ட வாலிபரை நேரில் வரவழைத்து நகை பறித்த அழகி

வாலிபரின் நகையை பறித்த பெண் வீடியோ காலில் தோன்றி இதுபோன்று வாலிபர்களிடம் நகைகளை பறிக்கும் அழகி என்பது தெரிய வந்தது.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

சென்னை:

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான வாலிபர். மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் பெண்களுடன் ஆபாசமாக பேசும் வசதி கொண்ட செயலி மூலமாக ரூ. 5 ஆயிரம் பணம் கட்டி உள்ளார். 3 பெண்களிடம் பேசுவதற்காக இதுபோன்று அவர் பணத்தை செலுத்தி உள்ளார்.

ரூ.5 ஆயிரம் பணம் கட்டினால் 2 மணி நேரம் மட்டுமே அவர்களுடன் பேச முடியும். இதுபோன்று எதிர்முனையில் பேசும் பெண்கள் நிர்வாணமாக நின்று பேசுவார்கள்.

நாள் முழுவதும் இந்த செயலியில் இளம்பெண்களுடன் வீடியோகாலில் பேசுவதற்கு கூடுதல் பணம் கட்ட வேண்டும். இதையடுத்து ஒருநாள் முழுவதும் இளம் பெண்களுடன் பேச ஆசைப்பட்ட வாலிபர் ரூ.30 ஆயிரம் பணத்தை கட்டினார்.

ஆனால் எதிர்முனையில் யாரும் பேசுவதற்கு முன்வர வில்லை. இதனால் பணம் கட்டிய வாலிபர் ஏமாற்றம் அடைந்தார்.

குறிப்பிட்ட செயலியில் இருந்து பேசுவதற்கு இளம் பெண்கள் யாரும் வராத நிலையில் பணமும் திரும்பி வராததால் வாலிபர் மன உளைச்சலில் இருந்தார்.

இந்த நிலையில் முதலில் ரூ.5 ஆயிரம் பணம் கட்டி பேசிய போது வாலிபருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை தொடர்ந்து பேசுவதற்கு வற்புறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் அசோக் நகர் காசி திரையரங்கம் அருகே வருமாறு வாலிபரிடம் கூறினார்.

இதனை நம்பி சல்லாப வாலிபர் காசி தியேட்டர் அருகே சென்றார். அப்போது அந்த பெண்ணுடன் 4 வாலிபர்கள் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து வாலிபரை தாக்கினர். பின்னர் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்தனர். இரு சக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றிபாதிக்கப்பட்ட வாலிபர் குமரன் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபரின் நகையை பறித்த பெண் வீடியோ காலில் தோன்றி இதுபோன்று வாலிபர்களிடம் நகைகளை பறிக்கும் அழகி என்பது தெரிய வந்தது. அவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகிறார் கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com