சென்னை அண்ணா சாலையில் மாநகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு

சென்னை அண்ணா சாலையில் மாநகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு (கோப்பு படம்)
பஸ் கண்ணாடி உடைப்பு (கோப்பு படம்)
Published on

சென்னை:

சென்னை திருவான்மியூரில் இருந்து பாரிமுனை செல்லக்கூடிய 1ஏ மாநகர பேருந்து அண்ணா சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 போதை ஆசாமிகளுக்கும் பஸ் டிரைவருக்கும் இடையே வழி விடுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த 2 போதை ஆசாமிகளும் மாநகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அண்ணா சாலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com