சென்னையில் வாலிபரிடம் செல்போன் பறிக்க முயன்ற 2 சிறுவர்கள் கைது

சென்னை அண்ணாசதுக்கம் பகுதியில் வாலிபரிடம் செல்போன் பறிக்க முயன்ற 2 சிறுவர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 1 செல்போன் மற்றும் குற்றசம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னை பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கடந்த 10-ந்தேதி அன்று இரவு 11.15 மணியளவில் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு, காமராஜர் சாலை, கண்ணகி சிலை அருகில் நின்று செல்போனில் பேசிக்

கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் ராஜசேகரின் செல்போனை பறிக்க முயற்சி செய்தபோது, ராஜசேகர் கூச்சலிட, செல்போன் பறிக்க முயன்ற 2 நபர்களும் ராஜசேகரை மிரட்டி விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.

இது குறித்து ராஜசேகர் D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணைசெய்யப்பட்டது. D-6 அண்ணாசதுக்கம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர்.

மேலும் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட 16 மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் சிறுவர்கள் இருவரும் சம்பவத்தன்று அடையாறு பகுதியில் ஒருவரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்து.

விசாரணைக்குப்பின்னர் 2 சிறுவர்களும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்படவுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com