பள்ளியாடி அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பள்ளியாடி அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு
வழக்கு
Published on

தக்கலை:

பள்ளியாடி அருகே உள்ள நரி விளான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரெஜினால்டு ஜோசப் (வயது49). மாற்றுத்திறனாளி. இவர் சம்பவத்தன்று கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பள்ளியாடி சேரிகடை அருகே வரும்போது கொல்லன்விளை பகுதியை சேர்ந்த ஆன்றோ (24), ஜிபின் (24), மேசாக் (25), குத்திவிளாகம் பகுதியை சேர்ந்த சஜின் (25), ஆகிய 4 பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.

ரெஜினால்ட் ஜோசப் இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நான்கு வாலிபர்களும் அவரை தகாத வார்த்தைகளால் பேசி கையில் வைத்திருந்த பாட்டிலால் ஒருவர் ஓங்கி தலையில் அடிக்க மற்றவர்கள் அடித்து உதைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த ரெஜினால்ட் ஜோசப் சத்தம் போடவே நான்கு பேரும் மிரட்டி விட்டு சென்று விட்டனர். மாற்றுத்திறனாளியை பாதசாரிகள் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து ரெஜினால்டு ஜோசப் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com