தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் பறிமுதல் - ஒருவர் கைது

கண்டாச்சிபுரத்தில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த காரை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் பறிமுதல்
கார் பறிமுதல்
Published on

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 218 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் பாக்குகள் 18 சாக்கு மூட்டைகளில் இருப்பது கண்டு அவற்றையும் அதனை கடத்தி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்திலிருந்து அனந்தபுரத்திற்கு இந்த தடை செய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் பார்க்குகள் கடத்தப்படுவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் சங்கர் வயது 36, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த கண்டாச்சிபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதை புகையிலை மற்றும் பாக்குகள் இவற்றின் மதிப்பு சுமார் 2 லட்சத்து 18 ஆயிரம் என தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com