தாராபுரத்தில் கறி கடைக்குள் புகுந்த கார் மோதி வாலிபர் பலி: 3 பேர் காயம்

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனது உறவினரான தமிழரசன் கறிக்கடையில் பகுதி நேரமாக கறி வெட்டும் வேலை செய்து வருகிறார்.கறி வெட்டிக்கொண்டிருந்த பிரகாஷ் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
தாராபுரத்தில் கறி கடைக்குள் புகுந்த கார் மோதி வாலிபர் பலி: 3 பேர் காயம்
Published on

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் பிரகாஷ் (வயது 30). இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனது உறவினரான தமிழரசன் கறிக்கடையில் பகுதி நேரமாக கறி வெட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலையில் இருந்து கறிவெட்டி கொண்டிருந்தார். அப்போது காலை சுமார் 9.30 மணி அளவில் உடுமலையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அங்குள்ள தமிழரசன் கறிக்கடைக்குள் புகுந்து நின்றது.

இதில் கறி வெட்டிக்கொண்டிருந்த பிரகாஷ் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாமாக இறந்தார். மேலும் கடைக்கு கறி வாங்க வந்த 2 பேர் மற்றும் கார் டிரைவர் செல்வராஜ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர்களை தாராபுரம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com