ரோந்து பணியில் ஈடுபட்ட விழுப்புரம் போலீஸ்காரர் விபத்தில் சிக்கி பலி

ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த போலீஸ்காரர் அடையாளர் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே கோலியனூர் குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். அவரது மகன் நாராயணன் (வயது 23). இவர் சென்னை குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலைபார்த்தார்.

நேற்று நள்ளிரவில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நாராயணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த நாராயணனின் பெற்றோர் கதறி துடித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் நாராயணனின் உடல் விழுப்புரம் குச்சிபாளையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com