ரெட்டிச்சாவடி அருகே அடுத்தடுத்து வந்த 4 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து- 4 பேர் காயம்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெட்டிச்சாவடி அருகே அடுத்தடுத்து வந்த 4 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து- 4 பேர் காயம்
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரியகாட்டுபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரை, மோட்டார் சைக்கிளில் மீது மோதாமல் அதன் டிரைவர் சாதுர்யமாக நிறுத்தினார்.

இதனை தொடர்ந்து கார் பின்னால் வந்த மற்றொரு காரும் நின்ற நிலையில், 3-வதாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதற்கு பின்னால் வந்த 4-வது காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து முதலில் நின்ற கார் மீது, 2-வதாக நின்ற கார் மோதியது.

இந்த விபத்தில் 4 காரும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த புதுவை மாநிலம் மணமேட்டை சேர்ந்த பூவரசன், கடலூர் மாவட்டம் உள்ளேரிப்பட்டை சேர்ந்த கதிரேசன், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கோகுல்ராஜ், அஜய், சரத்குமார் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com