மாரண்டஹள்ளி அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து நகை கொள்ளை

மாரண்டஹள்ளி அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே கங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் ஓசூரில் உள்ள கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கேயே வீடு வாடகைக்கு தங்கி வருகிறார்.

இவரது தாய் செங்கம்மாள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க காசுகள், ரொக்க பணம் ரூ.12 ஆயிரம் திருட்டு போய் இருந்தது.

இதுகுறித்து அவர் பஞ்சப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com