

பாலின சமத்துவத்தை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் மாணவ, மாணவியர்களிடம் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.
2022-2023ம் கல்வியாண்டில் 70 சென்னையில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.186 கோடியில் இணைய இணைப்பு வழங்கப்படும்.
2022-2023-ம் கல்வியாண்டில் 281 சென்னை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக ரூ.40 லட்சம் செலவில் கண்காட்சி நடத்தப்படும்.
2022-2023-ம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 72,000 மாணவ, மாணவியருக்கு ரூ.7.50 கோடியில் விலையில்லா சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்க நிதியில் செயல்படும் நிர்பயா திட்டத்தன் கீழ் தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு வாயிலாக 2022-2023-ம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் செய்யப்பட உள்ளது.
அதன்படி ரூ.23.66 கோடியில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் மற்றும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும். ரூ.5.47 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ரூ.6.91 கோடியில் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும்.
2022-2023-ம் நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 31 பள்ளிகளுக்கு வழங்கிய மண்டிச்சேரி உபகரங்களை சிறந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நடைமுறைப்படுத்துவதுடன், மேலும் இக்கல்வி முறை பிற மழலையர் வகுப்புகளில் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது சிட்டீஸ் திட்டத்தின் கீழ் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்கு ரூ.59 லட்சம் மற்றும் ரூ.2.45 கோடியில் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மட்டைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டுகளில் தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.35 லட்சம் செலவிட தட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியால் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு இப்பணிகள் விரைவாக முடிக்கப்படும்.
சென்னை பள்ளிகளில் குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்படும் பழுது, மின்சாதனங்களில் ஏற்படும் பழுது மற்றும் கழிவறைகளில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக சரி செய்து கொள்வதற்கு 119 சென்னை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.25000 வீதமும் 92 நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.30,000 வீதமும், 38 சென்னை உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.50,000 வீதமும் மற்றும் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.50,000 வீதமும் ஆக 281 தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.92.35 லட்சம் மிகாமல் செலவு மேற்கொள்வதற்கு அவசர செலவின நிதி வழங்கப்படும்.
சென்னை பள்ளி மாணவர்களின் உடல் நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக்காத்து கல்வியை திறம்பட கற்றிட, திருவான்மியூர் சுற்றியுள்ள 23 சென்னைப் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் தன்னார்வலர்கள் மூலம் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. காலைச் சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால், மேலும் பல பள்ளிகளில் தன்னார்வலர்களின் மூலம் விரிவாக்கம் செயல்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... இதற்கு மேலும் 'இந்தி'யா? தாங்குமா இந்தியா?- வைரமுத்து கேள்வி