அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறையில் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடல்

திருச்சி அருகே அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறையில் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறையில் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடல்
அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறையில் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடல்
Published on

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மருத்துவமனையில் உள்நோயாளிகள், புற நோயாளிகள், அவசர சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை, மகளிர் பிரிவு, பொதுப்பிரிவு, குடும்ப கட்டுப்பாடு பிரிவு, பால்வினை பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை அருகில் இருப்பதால் விபத்து பிரிவும் எப்போது மக்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும்.

இது போல் மக்கள் எந்தநேரமும் வந்து செல்லும் இந்த மருத்துவமனையின் மேல் தளத்தில் அறுவை சிகிச்சை கூடம் உள்ளிட்ட பல்வேறு அறைகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அறுவை சிகிச்சை கூடத்திலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தனர். அப்போது 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து உறுதி செய்து கொண்ட பின், மண்ணச் சநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத் தனர். பின்னர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டு வருவதோடு, அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை கூடத்தில் ஒரு பெண் உடல் அழுகி துர்நாற்றம் வீசும் அளவிற்கு இத்தனை நாட்கள் கிடந்தது எப்படி? என்று மருத்துவமனை ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com