சென்னை துறைமுகம் அருகே மீன்பிடித்தபோது கடலில் படகு மூழ்கியது- 2 மீனவர்கள் மீட்பு

கடலில் மூழ்கி மாயமான வெங்கடேசனை மீனவர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள்.
மீட்பு
மீட்பு
Published on

ராயபுரம்:

எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர்கள் மனோஜ்(22), கணேஷ்(24), வெங்கடேசன்(28). மீனவர்கள். இவர்கள் 3 பேரும் நேற்று இரவு எண்ணூர் கடற்பகுதியில் இருந்து பைபர் படகில் சென்னை துறைமுகம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் கடலில் 3 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். படகு கவிழ்ந்தபோது மனோஜின் தலையிலும், கணேசுக்கு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தண்ணீரில் தத்தளித்த மனோஜ் உள்பட 3 பேரும் துறைமுகம் பகுதி நோக்கி கடலில் நீந்த தொடங்கினர்.

இதனை கவனித்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக மனோஜ், கணேஷ் ஆகிய இருவரையும் மீட்டனர். இதற்குள் வெங்டேசன் கடலில் மூழ்கி மாயமானார். காயம் அடைந்த மனோஜிம், கணேசும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கடலில் மூழ்கி மாயமான வெங்கடேசனை மீனவர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள். இது குறித்து சென்னை துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com