பவானியில் இன்று காலை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மூதாட்டி தற்கொலை

பவானியில் இன்று காலை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி திருநீல கண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி லட்சுமி (70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து முதாட்டி லட்சுமி தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பொன்னம்மாள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com