கைது
கைது

ஆய்க்குடி அருகே செல்போன் திருடியவர் கைது

ஆய்க்குடி அருகே செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

தென்காசி:

ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியநாயகி கோவில் தெருவில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் இரவு நேரத்தில் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது செல்போனை மர்ம நபர் திருடிச் சென்றதாக ஆய்க்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார். அதில் செல்போனை திருடியது அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com