ஆவடி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ஆவடி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆவடி:

சென்னை வில்லிவாக்கம், செங்குன்றம் சாலையில் வசித்து வந்தவர் ஜானகிராமன் (வயது 54). இவர், ஆவடியை அடுத்த அண்ணனூர் ரெயில்வே பணிமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை இவர் டீ குடிப்பதற்காக அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஜானகிராமன் பலியானார். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com