அம்பத்தூரில் மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு: ஆட்டோ டிரைவர் கைது

அம்பத்தூரில் கல்வீசி மாநகர பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்த சம்பவம் குறித்து ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

அம்பத்தூர்:

அம்பத்தூர், சிவானந்த நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் கணேசன். ஆட்டோ டிரைவர். நேற்று மாலை அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே, தாம்பரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற மாநகர பஸ்சின் (எண்140) முன்பு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பஸ் டிரைவர் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேசன் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கணேசனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com