

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் கரட்டுபுதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்களை அனுப்பி வந்தார். இளம்பெண் அந்த வாலிபரை எச்சரித்தும் தொடர்ந்து அனுப்பி வரவே இது குறித்து இளம்பெண் தரப்பில் திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து எஸ்.பி., சசாங் சாய் உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த வாலிபர் மாரிமுத்து (வயது 25) என்பது தெரியவந்தது.அவரை திருப்பூர் கோவில் வழியில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாரிமுத்து பெயிண்டராக பணிபுரிந்த போது இளம்பெண்ணின் தாயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் இளம்பெண் செல்போனை பெற்றுக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி வந்தது தெரியவந்தது. மாரிமுத்துவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.