விழுப்புரம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா

விழுப்புரம் நகரில் விழுப்புரம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள ஸ்ரீ ரேணுகா அங்காள பரேமஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை திருவிழா நடக்கிறது.
அம்மன்
அம்மன்
Published on

விழுப்புரம்:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அனைத்து அம்மன் கோவில்களிலும் மாசி மாதத்தில் சிவராத்திரியும் மயான கொள்ளையும் நடைபெறும்.

குறிப்பாக தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள அம்மன் கோவிலில் அமாவாசை அன்று மயானக்கொள்ளை கொண்டாடப்படும். அதுபோல் தமிழகம் முழுவதும் அங்காளம்மன் கோவில் சார்பில் மயான கொள்ளை திருவிழா நடைபெறும். இத்திருவிழா பருவத ராஜகுல சமுதாயத்தின் சார்பில் நடைபெறுகிறது

அதுபோல் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரில் விழுப்புரம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள ஸ்ரீ ரேணுகா அங்காள பரேமஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை திருவிழா நடக்கிறது.

விழாவையொட்டி, வருகிற 27-ந் தேதி காலை பந்தக்கால் நடுதல், மறுநாள் காலை விநாயகர் பூஜை நடக்கிறது. தொடர்ந்து 1 -ந் தேதி காலை அய்யனார் குளத்தில் இருந்து கரகம் எடுத்தலும், இரவு லிங்க பூஜையுடன், புஷ்ப பிரபையில் அம்மன் வீதியுலா நடக்கிறது.

2-ந் தேதி பிற்பகல் 2 மணியளவில் ருத்ர பூமியில் மயானக் கொள்ளை நிகழ்ச்சியும், இரவு பூத வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.

தொடர்ந்து 3-ந் தேதி மாலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. 4-ந் தேதி மதியம் அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, மயானக் கொள்ளை உற்சவ அறங்காவலர்கள் மற்றும் விழுப்புரம் பருவதராஜ குலத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com