டிரான்ஸ்பார்மரில் இரும்பு கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி

மரத்தில் முருங்கைக்காய் பறித்தபோது டிரான்ஸ்பார்மரில் இரும்பு கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து முதியவர் பலியானார்.
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Published on

சென்னை:

திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்தவர் மணி (வயது72). இவர் இன்று காலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் முருங்கைக்காயை இரும்பு கம்பியால் பறித்தார். 

அப்போது அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் இரும்பு கம்பி உரசியது. இதில் மணி மீது மின்சாரம் பாய்ந்தது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பரிசோதித்த டாக்டர்கள். ஏற்கனவே மணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com