அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு- வக்கீல் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை

அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை
Published on

மதுரை:

மதுரை தெற்கு 3-ம் பகுதி அ.தி.மு.க. இளைஞரணி இணைச்செயலாளராக இருந்தவர் அழகர்சாமி (வயது 49). இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம்.

அங்கு கருவேல மரங்கள் குத்தகைக்கு எடுப்பதில் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு 10 பேர் கும்பலால் அழகர்சாமி கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது கொலை கும்பலைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவர் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜய லிங்கம், சோலைராஜ், ராமசாமி, அலெக்ஸ்பாண்டி, நீதிராஜன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நீதிராஜன் வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

முடிவில், இந்த வழக்கில் விஜயலிங்கம், சோலைராஜ், ராமசாமி, அலெக்ஸ்பாண்டி, நீதிராஜன், முனியசாமி, மற்றொரு அலெக்ஸ்பாண்டி, ரஞ்சித்குமார், நித்யானந்த் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com