கோவையில் கருணை கொலைக்கு மனு அளிக்கப்பட்ட 7 வயது குதிரை இறந்தது

குதிரையை கருணை கொலை செய்ய வேண்டும் என்று விலங்கு மீட்பு பணியாளர் விவேக் என்பவர் கோவை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தார்.
இறந்த குதிரை
இறந்த குதிரை
Published on

கோவை:

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி.புதூர் பகுதியில் குடியிருப்பு அருகே சாலையில் உடல்நலக்குறைவு காரணமாக குதிரை ஒன்று சுற்றித் திரிந்து வந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் விலங்குகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கால்நடை டாக்டர்கள் அங்குவந்து அந்தக் குதிரைக்கு சிகிச்சை அளித்தனர்.

ஆனால் அந்த குதிரை உடல்நிலை தேராமால் கனைத்து கொண்டு அந்த பகுதியில் படுத்து கிடந்தது. எனவே அந்த குதிரையை கருணை கொலை செய்ய வேண்டும் என்று விலங்கு மீட்பு பணியாளர் விவேக் என்பவர் கோவை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தார்.

இந்த நிலையில் அந்த குதிரை இறந்தது. இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறும்போது, இறந்து போன குதிரை கோதுமையை அதிக அளவு சாப்பிட்டு உள்ளது. இதனால் சரியாக ஜீரணம் ஆகாமல் இருந்து வந்தது. அந்தக் குதிரைக்கு 7 வயது இருக்கும் என்றனர். பின்னர் இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த குதிரையின் உடலை கணுவாய் பகுதிக்கு எடுத்துச் சென்று குழி தோண்டி புதைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com