கொடுங்கையூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 95 பவுன் நகை கொள்ளை

சென்னை கொடுங்கையூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 95 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

கொடுங்கையூர், அபிராமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். வி.ஏ.ஓ.வாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் அள்ளி சென்று இருப்பது தெரிந்தது.

கொடுங்கையூர் அருள் நகரை சேர்ந்தவர் மெர்வின் தாமஸ். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த அவர் 3 மாதம் இங்கு தங்கிவிட்டு மீண்டும் வீட்டை பூட்டி குடும்பத்துடன் துபாய் சென்றார்.

நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்மகும்பல் பீரோவில் இருந்த 60 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். அதிகாலையில் மெர்வின் தாமசின் வீட்டு கதவு பூட்டு திறந்து கிடப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மெர்வின் தாமசுக்கும், கொடுங்கையூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

2 இடங்களில் கொள்ளை நடந்திருப்பது பற்றி அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... நடுரோட்டில் குழந்தைகள் முன் குத்தி கொலை செய்யப்பட்ட பெண்- டெல்லியில் பரபரப்பு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com