வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 8 பேர் தீக்குளிக்க முயற்சி

குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.
Published on

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2 பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60) வழக்கறிஞராக உள்ளார்.

இவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் குடும்பத்தினர் 8 பேர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுக்கு சொந்தமான நிலம் வேலூர் காந்தி ரோட்டில் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல விடாமல் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com