கூடுவாஞ்சேரி அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை-ரூ.3 லட்சம் கொள்ளை

கூடுவாஞ்சேரி அருகே ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

வண்டலூர்:

கூடுவாஞ்சேரி அருகே உள்ள காரணை புதுச்சேரி கோகுலம் காலனியை சேர்ந்தவர் நந்தகோபால். வணிக வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இவர் கடந்த 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராணிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

பீரோவில் இருந்த 60 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று விட்டனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com