மாதவரம் பகுதியில் நகை-செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் கைது

கைதான சிவக்குமார் உள்பட 6 பேரும் மாதவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாதவரம் பகுதியில் நகை-செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் கைது
Published on

கொளத்தூர்:

மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி. இவர் கடந்த 25-ந் தேதி காலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நகையை பறித்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் மாதவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதிகளில் இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபி ஆகியோர் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரும்பாக்கத்தை சேர்ந்த முகமது நியாஸ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்ற அப்துல்லா, கொடுங்கையூரை சேர்ந்த ஜமால், மாதவரத்தை சேர்ந்த சையத் இப்ராஹிம் ஆகியோரும் கூட்டாளிகளாக இருந்தது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

கைதான சிவக்குமார் உள்பட 6 பேரும் மாதவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com