டால்மியாபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி

அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
டால்மியாபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலி
Published on

டால்மியாபுரம்:

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே மேலரசூர் கிராமத்தில் வசித்து வருபவர் அந்தோணிசாமி மகன் ரிச்சர்ட் (வயது 20). அதே ஊரை சேர்ந்த ஜெஸ்வின்குமார் (10). மேலரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் குமுளூரில் பட்டாசு வாங்குவதற்காக புள்ளம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ரிச்சர்ட் வாகனத்தை ஓட்டி சென்றார். பின்னார் ஜெஸ்வின்குமார் அமர்ந்திருந்தார்.

கல்லக்குடி வழியாக சென்றபோது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜா தியேட்டர் அருகே சென்ற போது, ராஜா தியேட்டர் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் கோபிநாத் (37) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில் பின்புறம் உட்கார்ந்து வந்த ஜெஸ்வின்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி செய்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மருத்துவர் ஆலோசனைப்படி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு ஜெஸ்வின்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இறந்த ஜெஸ்வின்குமார் 10 வயது என்பதால் மேலரசூர் கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com