வில்லிவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

சென்னை வில்லிவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

அம்பத்தூர்:

வில்லிவாக்கம், வடக்கு திருமலை நகரை சேர்ந்தவர் பிரியபிரசாத். அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டார்.

வீட்டில் இவரது 2-வது மகன் அர்ஜுன் பிரசாத் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலை 3 மணி அளவில் அவர் திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com